/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசார் கண்ணிய குறைவாக நடக்கக்கூடாது : டி.ஜி.பி., அட்வைஸ்
/
போலீசார் கண்ணிய குறைவாக நடக்கக்கூடாது : டி.ஜி.பி., அட்வைஸ்
போலீசார் கண்ணிய குறைவாக நடக்கக்கூடாது : டி.ஜி.பி., அட்வைஸ்
போலீசார் கண்ணிய குறைவாக நடக்கக்கூடாது : டி.ஜி.பி., அட்வைஸ்
ADDED : ஏப் 09, 2024 05:10 AM

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடந்தது.
டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் தலைமை தாங்கினார்.சீனியர் எஸ்.பி.க்கள் நாரா சைதன்யா, சுவாதிசிங், அனிதாராய், எஸ்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் பேசுகையில்; தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் போலீசார் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் கொடுக்கப்பட்டுள்ளனர். அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
போலீஸ் கொடி அணிவகுப்புகள் நடத்தி பொது அமைதியை உருவாக்க வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் இருந்து ஓட்டுப்பதிவு இடத்திற்கு கொண்டு செல்லும் போதும் அதை மீண்டும் கொண்டு வரும்போது கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் பொது கூட்ட பாதுகாப்பிற்கு செல்லும் போலீஸ் அதிகாரிகள் காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொள்ள கூடாது.
இதனை தனக்கு கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். இந்த தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.

