/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'கொள்கை முடிவு எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்'
/
'கொள்கை முடிவு எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்'
'கொள்கை முடிவு எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்'
'கொள்கை முடிவு எடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்'
ADDED : மே 25, 2024 03:53 AM
புதுச்சேரி: கொள்கை முடிவு எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அ.தி.மு.க., துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி மாநிலம் முழுவதும் தெருநாய்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டது. வீதிகளில் வாகனங்களில் செல்வோரையும், நடந்து செல்வோரையும் தெருநாய்கள் விரட்டுகின்றன.
சாலைகளில் தனியாக செல்லும் குழந்தைகளை நாய்கள் விரட்டி கடிக்கின்றன. இதனால் குழந்தைகளை வெளியே விளையாட விட முடியாமல் பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதேபோல் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தெருநாய்களால் மிகவும் அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது. அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது.
எதற்கெடுத்தாலும், பிராணிகள் நலவாரியம், பிராணிகள் நல அமைப்பினர் தடையாக உள்ளனர் என அவர்கள் மீது பழிபோட்டு தங்கள் இயலாமையை மூடி மறைத்து வருகின்றனர். பிராணிகள் நல வாரியம், பிராணிகள் நல அமைப்பினருடன் பேசி, தெருநாய்களை கட்டுப்படுத்த தேவையான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
விலை மதிப்பற்ற மனித உயிர்கள் வெறிநாய் கடியால் பலியாவதை ஒருபோதும் ஏற்க முடியாது. தெருநாய் விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

