/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவசத்தை வரையறை செய்ய கொள்கை மாஜி எம்.பி.,ராமதாஸ் கோரிக்கை
/
இலவசத்தை வரையறை செய்ய கொள்கை மாஜி எம்.பி.,ராமதாஸ் கோரிக்கை
இலவசத்தை வரையறை செய்ய கொள்கை மாஜி எம்.பி.,ராமதாஸ் கோரிக்கை
இலவசத்தை வரையறை செய்ய கொள்கை மாஜி எம்.பி.,ராமதாஸ் கோரிக்கை
ADDED : ஏப் 30, 2024 05:14 AM
புதுச்சேரி: இலவசத்தை வரையறை செய்யகொள்கை ஒன்றை அரசு அறிவிக்க வேண்டும் என முன்னாள் எம்.பி.,ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் ஓட்டு வங்கிக்காக சிவப்பு ரேஷன் கார்டு வாங்கிக் கொடுக்கப்படுகிறது.இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. புதுச்சேரி அரசின் பொதுப்பணத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே தெரிகிறது.வறுமை என்று முத்திரைக் குத்தி அரசு நிதியை இலவசமாகவும், மானியமாகவும், நிவாரணமாகவும், பரிசு பொருட்களாகவும், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு வழங்கி வீணடிக்கப்படுகிறது.
தனக்கு வேண்டியவர்களுக்கு இலவசமாக வழங்கி அவர்கள் ஓட்டுகளை வைத்து அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற யுத்தியுடன் முதல்வர் ஆட்சியை நடத்துகிறார் .பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு மூலதன முதலீட்டுக்கு நிதி இல்லை.
அதனால் புதுச்சேரியில் விவசாய வளர்ச்சி இல்லை.மீனவர்களின் தொழிலில் முன்னேற்றம் இல்லை.
சிறு குறு தொழில்கள் வளரவில்லை. மாறாக மூடப்பட்டு வருகின்றன.
ஒரு மேம்பாலத்தைக் கூட கட்ட அரசால் முடியவில்லை. வறுமை இங்கே அதிகமாக இருப்பதாகக் காட்டி அரசின் நிதி இலவசத்திற்காக வீணடிக்கப்படுகிறது. இலவசம் யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டியது அவசியம்தான். இதற்கான இலவசக் கொள்கையை ஒன்றை அரசு வரையறை செய்து அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

