தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தினமலர் கண்காட்சிக்கு அரசியல் தலைவர்கள் புகழாரம்

தினமலர் கண்காட்சிக்கு அரசியல் தலைவர்கள் புகழாரம்

தினமலர் கண்காட்சிக்கு அரசியல் தலைவர்கள் புகழாரம்


ADDED : ஆக 09, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்காட்சியிலும் விழிப்புணர்வு: சோலார் மானியம் தொடர்பாக தினமலர் எக்ஸ்போவில் ஆலோசனை வழங்குவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

‘தினமலர்’ நாளிதழ் நிறுவனம் செய்தி சேவையோடு மக்களிடையே உள்ள திறமைகளை வெளியுலகிற்கு கொண்டு வரவும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மற்றும் சமூக பொறுப்புடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதேபோன்று, மக்களின் தேவைகளை அறிந்து ஆண்டுதோறும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடத்தி வருகிறது. மக்கள் ஆர்வமாக வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதிலும், பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். பல கடைகளுக்கு சென்று தேடி, சென்று பொருட்களை வாங்குவதைவிட இங்கு ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கிறது.

தினமலர் நிறுவனம், தனது விழிப்புணர்வு பணியை இந்த எக்ஸ்போவிலும் விட்டுவிடவில்லை. இங்கு வரும் மக்களுக்க, சூரிய மின் விளக்கு திட்டம், சோலார் பயன்பாடு மற்றும் அதற்கு அரசு வழங்கும் மானியம் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறது. தினமலரின் சேவைக்கு வாழ்த்துக்கள் என்றார்.

நாராயணசாமி,

முன்னாள் முதல்வர், புதுச்சேரி.

குறைந்த விலையில் தரமான பொருட்கள்: ‘தினமலர’ எக்ஸ்போ ஆண்டுதோறும் புதுச்சேரியில் நடத்தப்படுகிறது. இந்த எக்ஸ்போவினால், புதுச்சேரி மட்டுமின்றி, தமிழக மக்களும் பயன்பெறுகின்றனர். தரமான பொருட்கள் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைக்கிறது. பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பயன் பெறுகின்றனர். உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கிறது.

மேலும், இங்கு அமைந்துள்ள ‘கிட்ஸ் ஜோனில்’ மழலைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதை பார்க்கும் போது, மனதிற்கே இதமாக உள்ளது. மக்களை மகிழ்விப்பதற்காக பிரம்மாண்டமான இடத்தில் எக்ஸ்போ நடத்தும் ‘தினமலர்’ நிர்வாகத்திற்கு நன்றி என்றார்.

கந்தசாமி,

முன்னாள் அமைச்சர், புதுச்சேரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us