/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தபால் நிலைய தொலைபேசி எண் இயங்காததால் வாடிக்கையாளர்கள் அவதி
/
தபால் நிலைய தொலைபேசி எண் இயங்காததால் வாடிக்கையாளர்கள் அவதி
தபால் நிலைய தொலைபேசி எண் இயங்காததால் வாடிக்கையாளர்கள் அவதி
தபால் நிலைய தொலைபேசி எண் இயங்காததால் வாடிக்கையாளர்கள் அவதி
ADDED : மே 28, 2024 03:42 AM
திருக்கனுார், : திருக்கனுார் தபால் நிலைய தொலைபேசி எண் கடந்த சில மாதங்களாக செயல்படாததால், வாடிக்கையாளர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருக்கனுார் தாபல் நிலையத்தின் கீழ் வாதானுார், கொடுக்கூர், மண்ணாடிப்பட்டு, ராதாபுரம், கோரைக்கேணி, கூனிச்சம்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம கிளை தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த தபால் நிலையத்தில் மத்திய அரசின் மூலம் மகளிர், குழந்தைகள், முதியவர்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வங்கிகள் மேற்கொள்ளும் பெரும் பாலான சேவைகள் தற்போது தபால் நிலையத்திலும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருக்கனுார் காந்தி வீதியில் செயல்பட்டு வந்த தபால் நிலையம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு வெங்கடாஜலபதி நகருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தபால் நிலையத்தில் இயங்கி வந்த 0413 2680185 தொலைபேசி எண், இடம் மாற்றம் செய்யப்பட்ட பிறகு இதுவரையில் இயங்கவில்லை.
இதனால் தபால் நிலையம் தொடர்பான சேவைகள் குறித்து அறிந்து கொள்ள முடியாமல், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே, கிராமப்புறங்களில் முதன்மை தபால் நிலையமாக செயல்படும் திருக்கனுார் தபால் நிலையத்தில் ரூ. 5 ஸ்டாம்ப் கடந்த சில வாரத்திற்கு மேலாக இருப்பு இல்லை.
எனவே, திருக்கனுார் தபால் நிலையத்தில் செயல்படாமல் உள்ள தொலைபேசி எண்ணை சரி செய்யவும், தேவையான தபால் ஸ்டாம்ப்களை இருப்பு வைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.