/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோழி இறைச்சி கழிவுகள் அகற்றம் நெட்டப்பாக்கம் ஆணையர் அதிரடி
/
கோழி இறைச்சி கழிவுகள் அகற்றம் நெட்டப்பாக்கம் ஆணையர் அதிரடி
கோழி இறைச்சி கழிவுகள் அகற்றம் நெட்டப்பாக்கம் ஆணையர் அதிரடி
கோழி இறைச்சி கழிவுகள் அகற்றம் நெட்டப்பாக்கம் ஆணையர் அதிரடி
ADDED : மே 25, 2024 03:59 AM

நெட்டப்பாக்கம்: மடுகரை-மேல்பட்டாம்பாக்கம் சாலையோரங்களில் கொட்டப்பட்ட கோழி கழிவுகளை நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில் ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.
மடுகரை-மேல்பட்டாம்பாக்கம் சாலை போக்குவரத்து மிகுந்ததாக உள்ளது.
இச்சாலை வழியாக தினமும் விழுப்புரம், பண்ருட்டி, கடலுார், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினமும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் மடுகரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இறைச்சி கடைகள் வைத்திருப்போர் இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை மடுகரை-பட்டாம்பாக்கம் சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக வீசிவிட்டு செல்கின்றனர்.
கழிவுகளை கிளறி சாப்பிட வரும் தெருநாய்களால் அவ்வழியாக செல்வோர்கள் விபத்துக்குள்ளாகினர்.
மேலும் துார்நாற்றம் வீசுவதால், பஸ் மற்றும் சாலை வழியாக பயனிக்கும் பொதுமக்கள் மூக்கை பிடித்தவாறு சென்றனர்.
இதையடுத்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில், ஊழியர்கள் மற்றும் குப்பை அகற்றும் ஊழியர்களை கொண்டு சாலையோரம் கொட்டப்பட்ட இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்தி மணல் கொட்டி சுத்தம் செய்தனர்.
மேலும் இறைச்சி கழிவுகளை கொட்டும் கடைகரார்களை ஆணையர் ரமேஷ் பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் கடுமையான சட்ட நடவடடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
தற்போது சாலை சுத்தமாக உள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

