/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் மரம் சாய்ந்து 6 மணி நேரம் 'பவர் கட்'
/
சாலையில் மரம் சாய்ந்து 6 மணி நேரம் 'பவர் கட்'
ADDED : ஜூன் 15, 2024 05:13 AM
அரியாங்குப்பம்: அபிேஷகப்பாக்கம் சாலையில் மரம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்ததால், 6 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் சாலையில் இருந்து சிங்கிரிகுடி, ஸ்ரீ அரவிந்தர் நகர் செல்லும் சாலை உள்ளது. சாலையோரத்தில் இருந்த பெரிய புளிய மரம் நேற்று காலை 8:00 மணியளவில் திடீரென சாய்ந்தது.
அப்போது, அவ்வழியாக, செல்லும் மின் கம்பிகள் அறுந்து, மின் கம்பம் சேதமடைந்தது. இதனால், ஸ்ரீஅரவிந்தர் நகர், கெம்யா அப்பார்ட்மென்ட் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்த தவளக்குப்பம் இளநிலை பொறியாளர் திருமுருகன் மற்றும் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மின்கம்பியில் சாய்ந்த மரத்தை அகற்றினர்.
சேதமடைந்த மின் கம்பம் மற்றும் மின் கம்பிகளை சீரமைத்தனர். 6 மணி நேரத்திற்கு பிறகு மதியம் 2:00 மணியளவில் அப்பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டது.