/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியூரில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
/
அரியூரில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
ADDED : ஜூன் 27, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரியூர் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி அமைக்க வேண்டும்.
வில்லியனுார் கொம்யூன் அரியூர் கிராமத்தில் இருந்து அனந்தபுரம் செல்லும் சாலையோரம், அருண் நகர் உள்ளது. இதில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தனியார் ரைஸ் மில்லில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது.
பொதுமக்கள் நடந்து செல்லும்போது அல்லது வாகனங்கள் செல்லும்போது மின்கம்பி உரசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மின்கம்பியை உயரமாக அமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.