/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: மாகி அணி வெற்றி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: மாகி அணி வெற்றி
ADDED : ஆக 12, 2024 05:15 AM

புதுச்சேரி: புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், மாகி மெகலோ டைகர்ஸ் அணி, அபார வெற்றி பெற்றது.
துத்திப்பட்டு, சீகெம் விளையாட்டு அரங்கில், புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று மதியம் நடந்த போட்டியில், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ், மாகி மெகலோ டைகர்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 173 ரன்கள் எடுத்து. அந்த அணியின் ஜஸ்வந்த் ஸ்ரீராம், 52 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து ஆடிய மாகி மெகலோ டைகர்ஸ் அணி 18.3 ஓவர்களில், 1 விக்கெட் இழந்து 175 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணியின் அஜய் ரோஹிரா, 58 பந்துகளில் 102 ரன்கள் அடித்து, இந்த லீக் போட்டியில் முதல் சதம் அடித்து சாதனை படைத்து, ஆட்டநாயகன் விருது வென்றார்.

