தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: 2வது தகுதிசுற்றில் ஏனாம் அணி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: 2வது தகுதிசுற்றில் ஏனாம் அணி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி: 2வது தகுதிசுற்றில் ஏனாம் அணி


UPDATED : ஜூலை 25, 2026 05:37 PM

ADDED : ஜூலை 24, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2026 05:37 PM ADDED : ஜூலை 24, 2026 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரீமியர் லீக் 3வது சீசன் கிரிக்கெட் போட்டியில் ஏனாம் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஸ்ரீராம் கேபிடல் வழங்கும், பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 3வது சீசன், சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை 6.00 மணிக்கு நடந்த எலிமினேட்டர் சுற்றில் ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணியும், காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த ஏனம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா கர்வால் 12, வேதாந்த் பரத்வாஜ் 23, ரன்களின் அவுட்டாகினர். சோம்ராஜ் பிஷ்னாய் 72, ரன் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய காரைக்கால் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்ரிதேஷ் யாதவ் 12, கவுதம் சாஸ்திரி 11 ரன்களில் அவுட்டாகினர். விக்னேஷ்வரன் 1, அச்சல் சிங்க்ளா 7, பவன் சங்கர் 19, அங்கித் சர்மா 6, என அடுத்தடுத்து அவுட்டாகினர். காரைக்கால் அணி 18.1 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனம் மூலம் ஏனம் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. 10 பந்துகளில் 41 ரன்கள் குவித்த இர்பான் உல் ஹக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில், மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வில்லியனுார் அணியுடன் மோதும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us