/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து செவிலியர் மாணவியருக்கு விளக்கம்
/
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து செவிலியர் மாணவியருக்கு விளக்கம்
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து செவிலியர் மாணவியருக்கு விளக்கம்
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து செவிலியர் மாணவியருக்கு விளக்கம்
ADDED : மே 29, 2024 05:27 AM

புதுச்சேரி : புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து செவிலியர் கல்லுாரி மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மத்திய அரசு அமல்படுத்திய புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள தண்டனை மற்றும் புகார் அளிப்பதில் உள்ள எளிய வழிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் உள்ள செவிலியர் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், கோரிமேடு மதர்தெரேசா செவிலியர் கல்லுாரி மாணவிகளும் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் பிரமிளா வரவேற்றார்.
கிழக்கு எஸ்.பி., லட்சுமிசவுஜன்யா, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விளக்கினர்.
அதில், குற்றம் எங்கு நடந்தாலும் எல்லைகள் பார்க்காமல் போலீசார் வழக்குப் பதிவு செய்தல், செயின் பறிப்புக்கு என தனி சட்டம், போக்குவரத்து விதிமீறல், அடிதடி உள்ளிட்ட குற்றங்களுக்கு சமுதாய பணி என்ற முறையில் தண்டையுடன் திருத்தும் வகையில், மருத்துவமனையில் சேவை பணி, போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிகள் தண்டனையாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விபத்து ஏற்படுத்தி காயமுற்றவரை காப்பாற்றாமல் சென்றால், 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்குதல், அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படும்.
புதிய குற்றவியல் சட்டத்தில், கொலை மற்றும் தொடர் குற்றத்தில் ஈடுப்படுவோருக்கு மரண தண்டனை வழங்க வழி செய்யப்பட்டுள்ளது' என, போலீசார் தெரிவித்தனர்.