/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஸ்பெக்டருக்கு ஜனாதிபதி விருது
/
இன்ஸ்பெக்டருக்கு ஜனாதிபதி விருது
ADDED : ஆக 15, 2024 05:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி இன்ஸ்பெக்டருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவையொட்டி, 4 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம், 20 பேருக்கு ராஜிவ் பதக்கங்களை உள்துறை அறிவித்துள்ளது.
அதன்படி சிறந்த சேவைக்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன் (குற்றப் பதிவேடுகள் துறை), மோகன் (காரைக்கால் டவுன் போலீஸ் நிலையம்), மிகச்சிறந்த சேவைக்காக சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர்கள் மைனா (காவலர் பயிற்சி பள்ளி), முகமத் லியாகத்அலி (சி.பி.சி.ஐ.டி., போலீஸ் நிலையம்) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
ராஜிவ் பதக்கம்
இதேபோல் ராஜிவ் பதக்கம், புதுச்சேரி மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், ஒதியஞ்சாலை சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் (ஐ.ஆர்.பி.என்.), சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், வெங்கடேஷ், ரகு, சங்கர், ஆனந்தபூபதி, திருமுருகன், விஜயகுமார், இளங்கோ, சிறப்பு நிலை ஏட்டுகள் டி.கோவிந்தன், இசைவேந்தன், ராஜவேல், எஸ்.கோவிந்தன், அரிகரன், பெரியசாமி, சிவகணேஷ், ஜெயக்குமார், கலைநிதி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த போலீஸ் நிலையமாக புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் விஸ்வநாதனுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.