/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் போராட்டம்
/
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் போராட்டம்
ADDED : ஏப் 17, 2024 12:19 AM
புதுச்சேரி : அரசு மருத்துவமனையில், டாக்டர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வில்லி யனுார், கோரிமேடு, தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களிடம் சிகிச் சைக்கு வரும் சிலர் அவ்வப்போது தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. சிலர் டாக்டர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டாக்டர் நவீன் குமார் என்பவரை, போதை ஆசாமி வினோத், கத்தியால் வெட்டினார். படுகாயம் அடைந்த டாக்டருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள், செவிலி யர்கள், பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது டாக்டர்களுக்கு, போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். டாக்டர்களை தாக்குபவர்கள் மீது, கடுமையான தண்டனை வழங்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தினர்.
இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல, கோரிமேடு, தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள், செவிலியர்களும் நேற்று காலை பணியை புறக்கணித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

