/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழர் அடையாளத்தோடு பிரதமர் மோடி ஆட்சி செல்வகணபதி எம்.பி., புகழாரம்
/
தமிழர் அடையாளத்தோடு பிரதமர் மோடி ஆட்சி செல்வகணபதி எம்.பி., புகழாரம்
தமிழர் அடையாளத்தோடு பிரதமர் மோடி ஆட்சி செல்வகணபதி எம்.பி., புகழாரம்
தமிழர் அடையாளத்தோடு பிரதமர் மோடி ஆட்சி செல்வகணபதி எம்.பி., புகழாரம்
ADDED : ஜூன் 28, 2024 06:21 AM
புதுச்சேரி: அறத்தின் சாட்சியாக தொடர்ந்து பாராளுமன்றத்தில் இருக்கும் செங்கோலை, பிரதமர் மோடி பாதுகாப்பார் என, செல்வ கணபதி எம்.பி., தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பாராளுமன்றத்தில் கடந்தாண்டு பிரதமர் மோடி, தமிழர்களின் கலாசாரம், நெறி தவறாத ஆட்சி முறையின் அடையாளமாக திகழும் செங்கோலை நிறுவினார்.
பாரத பண்பாட்டின் வேர்களில் புதைந்து கிடந்த பல அடையாளங்களை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, நமது பண்பாட்டு சிறப்புகளை உலகுக்கு எடுத்துரைத்தார்.
அதில் ஒன்று தான் இந்த செங்கோல். நெறி தவறா ஆட்சிக்கு ஒரு அடையாளம். அதை கொச்சைப்படுத்தி, சமாஜ்வாடி எம்.பி., சவுத்ரி பேசி உள்ளார். அதற்கு இண்டியா கூட்டணி கட்சிகளும், வக்காலத்து வாங்கி, தமிழர் பெருமையை சீர் குலைத்துள்ளன.
கருணாநிதியை சோழ மன்னராக போற்றிய தி.மு.க.,வினர், இப்போது செங்கோல் மன்னராட்சியின் 'குறியீடு' என்கின்றனர். பிடிக்காத ஆட்சிகளை, இந்திரா மற்றும் ராஜிவ் அரசுகள், 356 பிரிவை வைத்து கலைத்தது தான், அவர்களின் செங்கோன்மை.
பாரதம், இந்துக்களின் கலாசாரம், பண்பாடுகளால் நிரம்பிய தேசம். அதன் ஒரு துளி தான் செங்கோல். இந்துக்களான தமிழர் பெருமையும் அது தான். அந்த விழுமியங்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பின் தொடர்ந்தனர். ஆட்சி அதிகாரங்களுக்கு பெருமை சேர்த்தனர்.
அந்த பாரம்பரியத்தை பிரதமர் மோடி தொடர்கிறார். தமிழர் அடையாளத்தோடு ஆட்சியை அறத்துடன் நடத்துகிறார்.
நிறுவிய இடத்தில் செங் கோல், அறத்தின் சாட்சியாக தொடர்ந்து பார்லி., யில் இருக்கும். பிரதமர் மோடி அதை பாதுகாப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.