தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிக்கு பிரைம்ரோஸ் பள்ளி மாணவர் தேர்வு
தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிக்கு பிரைம்ரோஸ் பள்ளி மாணவர் தேர்வு
ADDED : ஆக 05, 2026 05:40 PM
புதுச்சேரி: கேரளாவில் நடக்கும் தேசிய அளவிலான சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க பிரைம்ரோஸ் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி, பிரைம்ரோஸ் மேல்நிலைப் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவர் மிதுன் கார்த்திக், வேலுாரில் நடந்த சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகளுக்கான மண்டல மற்றும் பிராந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
லாசா டேபிள் டென்னிஸ் கிளப்பில் பயிற்சி பெற்று வரும் மிதுன் கார்த்திக், சி.ஐ.எஸ்.சி.இ., தமிழ்நாடு மண்டலத்தின் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல்நிலை வீரராக திகழ்ந்து வருகிறார். அதன் காரணமாக, கேரளாவில் நடக்கவுள்ள சி.ஐ.எஸ்.சி.இ., தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்ற மாணவர் மிதுன் கார்த்திக்கை, பிரைம்ரோஸ் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிளப் பயிற்சியாளர்கள் பாராட்டினர்.
