/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆவண எழுத்தர் உரிமம் முதல்வர் வழங்கல்
/
ஆவண எழுத்தர் உரிமம் முதல்வர் வழங்கல்
ADDED : செப் 05, 2024 07:22 PM

புதுச்சேரி:பதிவுத்துறை மூலம் ஆவண பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு, எழுத்தர் உரிமத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி பதிவுத்துறை மூலம், ஆவணம் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ஆவண எழுத்தர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2014 -15 முதல் 2020 - 21ம் கல்வி ஆண்டு வரை ஆவண தயாரிப்பில் பட்டய படிப்பு முடித்த 48 நபர்கள் ஆவண எழுத்தர் உரிமத்திற்காக விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் விண்ணப்பம் காவல்துறைக்கு அனுப்பி ஆய்வு அறிக்கை பெறப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் 45 விண்ணப்பதாரர்கள் ஆவண எழுத்தர் உரிமம் பெற தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிமம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி ஆவண எழுத்தர் உரிமத்தை பயனாளிகளுக்கு வழங்கினார்.