/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப்போட வலியுறுத்தி விழிப்புணர்வு மாணவிகளுக்கு முதல்வர் பாராட்டு
/
ஓட்டுப்போட வலியுறுத்தி விழிப்புணர்வு மாணவிகளுக்கு முதல்வர் பாராட்டு
ஓட்டுப்போட வலியுறுத்தி விழிப்புணர்வு மாணவிகளுக்கு முதல்வர் பாராட்டு
ஓட்டுப்போட வலியுறுத்தி விழிப்புணர்வு மாணவிகளுக்கு முதல்வர் பாராட்டு
ADDED : மே 14, 2024 05:07 AM

புதுச்சேரி: தேர்தலில் வாக்களிப்பது குறித்து, இலச்சினை மாதிரி வரைபடத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சாதனை செய்த மாணவிகளை முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் ( ஸ்வீப் ) என்ற திட்டத்தின் கீழ், வாக்களிப்பது குறித்த தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.
கடந்த லோக்சபா தேர்தலில் போது, புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் பசுமைத் தேர்தல் இலச்சினை பெரிய வடிவில் மாதிரி வரைபடம் வரைதல் நிகழ்ச்சிஅபிஷேகப்பாக்கத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 240 அடி நீளம், 136 அடி அகலம் கொண்ட இந்த மாதிரி இலச்சினை 32,640 சதுர அடியில் வரையப்பட்டுள்ளது. வரைபடத்தில் 10 கிலோ எடை கொண்ட அரைக்கீரை, சிறுகீரை விதைகள் விதைக்கப்பட்டது.
750 கிலோ கோல மாவு கொண்டு மாதிரி இலச்சினை வரைபடத்தை, க்ரசெண்ட் 9ம் வகுப்பு மாணவிகள் சஜிதா, பவித்ரா ஆகியோர் செய்திருந்தனர். சுற்றுச்சூழல் பாதிப்பால் பொதுமக்கள் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். மேலும், பைகில் சென்று வாக்களிக்கும் போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படும்.
எனவே அனைவரும் நடந்து சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இலச்சினை வரைபடத்தை வரைந்த மாணவிகளுக்கு கலாம் உலக சாதனை நிறுவனம் மாணவிகளுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.
மாணவிகள் இருவரும், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து, சான்றிதழ் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

