/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புனித வெள்ளியில் முதல்வர் பிரார்த்தனை
/
புனித வெள்ளியில் முதல்வர் பிரார்த்தனை
ADDED : மார் 29, 2024 03:16 AM
புதுச்சேரி: அன்பிற்கினிய கிறித்துவ சகோதர - சகோதரிகளுக்கு, இறைவனின் ஆசீர்வாதங்கள் எப்போதும் பொழிய பிரார்த்திப்பதாக, முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள புனித வெள்ளி செய்திக்குறிப்பு:
தன் உயிரை தந்ததன் மூலம், இயேசு கிறிஸ்து நம் மீது, வைத்திருந்த அளப்பரிய அன்பை உணர்த்துகின்ற நாளாக, இந்த புனித வெள்ளி விளங்குகிறது.
வாழ்க்கையில் நல்ல காரியங்களை செய்வதற்கும், நல்ல மனிதராக இருப்பதற்கும், இயேசுவின் நிபந்தனையற்ற அன்பே, மிகப்பெரிய உந்துதலாக இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் உயிர் தியாகம் நம் இதயத்திற்கு பலத்தையும், அன்பையும் கூட்டுவதாக உள்ளது.
இந்த புனித நாளில் எனது அன்பிற்கினிய கிறித்துவ சகோதர - சகோதரிகள், அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதங்கள் எப்போதும் பொழிய பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

