/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்
/
மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்
ADDED : ஆக 10, 2024 04:51 AM

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களை பார்த்து உற்சாகமடைந்த முதல்வர் ரங்கசாமி கலந்துரையாடினார்.
நேற்று சட்டசபை நிகழ்வுகளை பார்வையிட்ட காரைக்கால் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினார்.
அரசுப் பள்ளி மாணவர்களை பார்த்து உற்சாகமடைந்த முதல்வர் அங்கிருந்த அரசு செயலர்களை சுட்டி காட்டினார். இவர்கள் எல்லாம் அரசு பள்ளிகளில் படித்து நன்றாக மதிப்பெண் எடுத்ததால் இந்த நிலைக்கு வந்துள்ளனர். அரசாங்கம் நடத்துவற்கு அவர்கள் தான் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.
எல்லா மாணவர்களுக்கும் திறமை உள்ளது. ஏழ்மை நிலையில் இருப்பதால் தான் அரசுப் பள்ளிகளில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் திறமையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான இலவச புத்தகம், உணவு உள்பட அனைத்தையும் அரசே கொடுத்து விடுகிறது. நீங்கள் நன்றாக படித்தால் மட்டும் போதும். தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அரசு பள்ளிகளில் படித்தாலும் சிறந்த நிலையை அடைய முடியும். அரசு பள்ளிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தரப்படுகிறது. ஆனால் மருத்துவ படிப்பில் சேர குறைவாகவே அரசு பள்ளி மாணவர்கள் முயற்சிக்கின்றனர். ஐ.ஏ.எஸ்., மட்டுமின்றி மருத்துவம் பயில அரசு பள்ளி மாணவர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.
சந்திப்பின்போது அமைச்சர் திருமுருகன், நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.