/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெட்டப்பாக்கத்தில் பரிசளிப்பு விழா
/
நெட்டப்பாக்கத்தில் பரிசளிப்பு விழா
ADDED : பிப் 27, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்; சூரமங்கலம் ஜெயதுர்கா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் இங்கீலிஷ் டே விழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தாளாளர் மணி தலைமை தாங்கி, விழாவினை துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாகி விஜயாமணி பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். விழாவையொட்டி, மாணவர்களின் கலை திறன் நிகழ்ச்சிகள், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.