/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
/
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ADDED : செப் 01, 2024 03:55 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் 20ம் ஆண்டு விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது.
போட்டியின் துவக்கமாக பள்ளியின் தேசிய மாணவர் படை, விமானப்படை, கடற்படை, சாரண சாரணியர், கப்ஸ் அண்ட் புல்புல்ஸ், துணை இளநிலை, இளநிலை, முதுநிலை பிரிவுகளில் மாணவ, மாணவியரின் வண்ணக் கொடிகளின் அணிவகுப்பு நடந்தது.
அணிவகுப்பு மரியாதையை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், முதல்வர், துணை முதல்வர் ஏற்றுக்கொண்டனர். தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, ஆர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆதித்யா ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, உடற்கல்வித்துறை இயக்குனர் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
போட்டிகளில் மாணவ, மாணவியர் வீனஸ், மார்ஸ், ஜூபிட்டர், நெப்டியூன் அணிகள் என பிரிக்கப்பட்டு, உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு ஏறிதல், தடகளம், ஓட்டப்பந்தயம், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, , சதுரங்கம், கையூந்துப் பந்து போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் பெற்ற வீனஸ் அணி மாணவ, மாணவியருக்கு ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன் சான்றிதழ் மற்றும் சுழற்கோப்பை வழங்கினார்.
இதில், 250 கராத்தே மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி, அரேபிய கலை நடனம் நடந்தன.