கொரவள்ளிமேடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
கொரவள்ளிமேடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜூன் 29, 2026 09:41 PM
பாகூர்: கொரவள்ளிமேடு தியாகி சுப்ரமணியப் படையாச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கலாம் மக்கள் சாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த விழாவில், விரிவுரையாளர் காந்தி வரவேற்றார். துணை முதல்வர் தில்லைகண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை பத்மபிரியா முன்னிலை வகித்தார். கலாம் மக்கள் சாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சாண்டில்யன், ஜமுனாரவி, லதா குணசேகரன், முனியப்பன், ரவிந்திரன் ஆகியோர், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசி ரொக்க பரிசு வழங்கினார்.
ரோஷன், இளங்கோ, அரவிந்தன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். விரிவுரையாளர் நாராயணசாமி நன்றி கூறினார். விழாவில், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
