/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
/
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 17, 2024 12:47 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற, துளுவ வேளாளர் சமுதாய மாணவ, மாணவியருக்கு, தங்கக்காசு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக, நலச்சங்க மாநில தலைவர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
கடந்த, 2023ம் ஆண்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, மற்றும் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற்ற, துளுவ வேளாளர் சமுதாய மாணவ, மாணவியருக்கு, தங்கக்காசு, ஊக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இதைபுதுச்சேரி மற்றும் காரைக்கால் துளுவ வேளாளர் நலச்சங்கம் மற்றும் புதுச்சேரி பிரதேச துளுவ வேளாளர் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்துகிறது.துளுவ வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த, மாணவ, மாணவியர் மட்டும் தங்களின் தொலைபேசி எண் மதிப்பெண் மற்றும் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றின் நகல்களை வரும், 30ம் தேதிக்குள் ராஜலட்சுமி இல்லம், எண்:45, முதல் தெரு, புதுசாரம், புதுச்சேரி என்ற முகவரியிலும் அல்லது எண்:433, காமராஜ் சாலை, பழைய சாரம், புதுச்சேரி என்ற முகவரியிலும், மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, கொடுத்து, முன்பதிவு செய்து பயன் பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, 9500701487, 8754180380, 8056412061 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.