ADDED : செப் 02, 2024 01:19 AM

புதுச்சேரி, : புதுச்சேரி தமிழ்ச் சங்கம் சார்பில் விடுதலை நாள் விழாவை முன்னிட்டு தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
சங்க வளாகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் கலைமாமணி முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். துணைத் தலைவர்கள் தமிழ்மாமனி ஆதிகாசவன், திருநாவுகரசு, பொருளாளர் அருள்செல்வம், துணைச் செயலாளர் தினகரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சங்கீதா கண்ணன், அம்பேத்கார் இலக்கிய பேரவை தலைவர் அன்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆட்சிக்குழு உறுப்பினர் கலைமாமணி ராஜா நன்றி கூறினார். தமிழ்மாமனி உசேன், சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.