/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு பரிசு
/
ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு பரிசு
ADDED : ஆக 12, 2024 04:50 AM
பாகூர்: ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் பரிசு வழங்கினர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகி றது. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வோர், விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். அதை தடுத்திட, பைக்கில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண் டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் புதுச் சேரி போக்குவரத்துக் போலீஸ் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரி - கடலுார் சாலை அரியாங்குப்பம் சிக்னலில் நடந்தது.
போக்குவரத்து போலீஸ் சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, தெற்கு பகுதி போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார், ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் லட்சுமிபதி, நிர் வாக குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்
அப்போது, ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு, தட்டு, டம்ளர் உள்ளிட்ட எவர் சில்வர் பாத்திரங்களை போக்குவரத்து போலீசார் பரிசாக வழங்கி, பாராட்டினர்.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

