/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும்' பா.ஜ., மேலிட பொறுப்பாளர் 'அட்வைஸ்'
/
'பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும்' பா.ஜ., மேலிட பொறுப்பாளர் 'அட்வைஸ்'
'பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும்' பா.ஜ., மேலிட பொறுப்பாளர் 'அட்வைஸ்'
'பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும்' பா.ஜ., மேலிட பொறுப்பாளர் 'அட்வைஸ்'
ADDED : ஜூலை 15, 2024 02:12 AM

புதுச்சேரி: கூட்டணிக்குள் உள்ள பிரச்னைகளை முதல்வர் ரங்கசாமி மற்றும் நம் கட்சியிடமும் பேசி தீர்வு காண வேண்டும் என, பா.ஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்தார்.
பதுச்சேரி மாநில பா.ஜ., செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமையில் நடந்தது. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பா.ஜ., மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:
இங்கு கூட்டணிக்குள் சில பிரச்னைகள், எதிர்பார்ப்புகள் உள்ளது. அதனை கூட்டணி கட்சி தலைவர் முதல்வர் ரங்கசாமியிடமும்,நமது கட்சியிடமும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், புதுச்சேரி மக்கள் பா.ஜ.,வை சேர்ந்த, 6 பேருக்கு வெற்றி வாய்ப்பை தந்தனர்.
தற்போதைய லோக்சபா தேர்தலிலும், நாம் முழுமையாக பணி செய்தோம். ஆனால், மத்திய அரசின் திட்டம் மற்றும் சாதனைகளை சரிவர கொண்டு செல்லவில்லை என, நினைக்கிறேன். கூட்டணி கட்சியினரும், நம் கட்சியினரும் கடுமையாக உழைத்தனர்.இதில் கட்சி தலைமை, 95 சதவிகிதம் திருப்தி அடைந்துள்ளது. தொடர்ந்து கட்சியை வலுப்படுத்த பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோரை அவர் தங்கியிருந்த ஓட்டலில், சபாநாயகர் செல்வம், பா.ஜ அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் மற்றும் பா.ஜ எம்.எல்.ஏ.,க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.