/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாமில் 331 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சம் உற்பத்தி மானியம்
/
ஏனாமில் 331 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சம் உற்பத்தி மானியம்
ஏனாமில் 331 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சம் உற்பத்தி மானியம்
ஏனாமில் 331 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சம் உற்பத்தி மானியம்
ADDED : ஜூன் 27, 2024 02:48 AM

புதுச்சேரி: ஏனாமில், 331 விவசாயிகளுக்கு பயிர்களுக்கான உற்பத்தி மானியம் வழங்கப்பட்டது.
ஏனாம் பகுதியில், நெல், பருப்பு (கருப்பு பருப்பு மற்றும் பச்சை பருப்பு) தேங்காய் மற்றும் தீவனப்புல் உள்ளிட்ட பயிர்களுக்கான உற்பத்தி மானியம் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஏனாம் நிர்வாகி முனிசாமி தலைமை தாங்கினார். விவசாயத் துறை துணை இயக்குனர் சிவசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இதில், 331 விவசாயிகளுக்கு, ரூ.24 லட்சத்து 14 ஆயிரத்து 232 மானியமாக வழங்கப்பட்டது. விழாவில், புதுச்சேரி அரசின் சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினார். ஏற்பாடுகளை விவசாயத் துறை அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.