/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
/
பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ADDED : மார் 04, 2025 09:44 PM
புதுச்சேரி : பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கும், போலீஸ் பயிற்சி பள்ளி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிக்மா செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜஷன், லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமு, லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இனியன், ஊர்க்காவல் படை பிரிவு இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் அதே போலீஸ் ஸ்டேஷன்களில் பணியினை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் திருநள்ளார் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவினை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.