ADDED : ஆக 26, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நகரப் பகுதியில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரியில் பேனர்கள் வைக்க தடை உள்ளது. இருப்பினும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பது வாடிக்கையாகி வருகிறது. இது தொடர்பாக வரும் புகார்கள் மீது போலீசாரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம், ஜெயா நகர், மேட்டுப்பாளையம் சந்திப்புகளில் தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து உழவர்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா, ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் அனுமதியின்றி பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.