நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் ஏரிக்கரை வீதியில் உள்ள சாராயக்கடையை அகற்ற வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாகூர் சிவன் கோவில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலச் செயலாளர் அமுதா தலைமை தாங்கினார். பாகூர் தொகுதி செயலாளர் செயலாளர் சரோஜா, மாநில துணை செயலாளர் சுமதி, வில்லியனுார் தொகுதி செயலாளர் நளினி, தேசிய சம்மேளனம் மூத்த தலைவர் வசந்தி, ஏரிக்கரை வீதி தலைவர் பரமசிவம், பவதாரணி ரவி, விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெருமாள், விவசாயிகள் சங்க தலைவர் தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், சாராயக் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.