ADDED : ஜூலை 21, 2026 02:50 PM
புதுச்சேரி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதை தடுக்க கோரி புதுச்சேரி மாநில இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சிவக்குமார், பொருளாளர் தியாகு, துணைச்செயலாளர் செந்தில், மாநில இளைஞரணி செயலாளர் தியாகு, கண்ணன், குமரன், துணை செயலாளர் ஜெயமூர்த்தி, தொகுதி செயலாளர் பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகள் வினோத், கிருஷ்ணா, பலராமன், சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தடுப்பதோடு, மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம், புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்கிட வேண்டும் என கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
