தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளிக்கு  கத்தி வெட்டு: மூன்று பேர் மீது வழக்கு 

தொழிலாளிக்கு  கத்தி வெட்டு: மூன்று பேர் மீது வழக்கு 

தொழிலாளிக்கு  கத்தி வெட்டு: மூன்று பேர் மீது வழக்கு 


UPDATED : ஜூலை 21, 2026 03:48 PM

ADDED : ஜூலை 21, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 03:48 PM ADDED : ஜூலை 21, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: சுமை துாக்கும் தொழிலாளியை, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வார்க்கால்ஓடை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு மகன் வினோபாரதி, 22; சுமை துாக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது, ஆதிங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கூட்டமாக சுற்றித் திரிந்துள்ளனர். வினோபாரதி, அவர்களிடம் ஏன் இங்கு கூட்டமாக வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாலிபர்கள் அங்கிருந்த சென்று விட்டனர்.

பின்னர், சிறிது கழித்து மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல், வார்க்கால் ஓடை கிராமத்திற்கு சென்று, வினோபாரதியை கத்தியில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதில், படுகாயமடைந்த அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து, அவரது தந்தை பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில், ஆதிங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பரசன், ராஜா, தர்மா ஆகியோர் மீது கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us