/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசாரை தாக்கியதை கண்டித்து மறியல்
/
போலீசாரை தாக்கியதை கண்டித்து மறியல்
ADDED : ஆக 10, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுாரில், குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீஸ்காரர் தாக்கப்பட்டார்.குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி மகளிர் முன்னேற்ற அமைப்பின் தலைவர் அருள்பூஷனி தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை 6:30 மணியளவில், ராஜிவ் சதுக்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதையடுத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததையடுத்து, மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

