ADDED : ஆக 17, 2026 06:01 PM
காரைக்கால்: காரைக்காலில் தொடர் மின்வெட்டை கண்டித்து தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும், மின்வெட்டை கண்டித்து தி.மு.க., சார்பில் நேற்று தலைமை மின் நிலையம் வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காரைக்கால் எம்.எல்.ஏ., நாஜிம் தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க., நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு, அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. நாக தியாகராஜன், தி.மு.க.,பிரமுகர் பிரபு,ராஜா உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
