/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததை கண்டித்து போராட்டம் மக்கள் முன்னேற்ற கழகம் அறிவிப்பு

ADDED : ஆக 19, 2024 05:12 AM
புதுச்சேரி: உள்ளாட்சி தேர்தலை நடத்தாததை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என, புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சட்டசபை கூட்டத் தொடரில் மாநில அந்தஸ்து தொடர்பாக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்வருக்கு பாராட்டு.
அதே நேரத்தில் அவர் புதுச்சேரியில் உள்ளாட்சி அரசின் அதிகாரத்தைப் பற்றியோ 13 ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ள உள்ளாட்சித் தேர்தலைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது. கடைசியாக உள்ளாட்சி தேர்தல் 2006ல் நடத்தப்பட்டது. 2011ல் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 2024 வரை 13 ஆண்டுகளாக நடத்தவில்லை. எனவே முதல்வரின் உள்ளாட்சிக்கு எதிரான மனப்போக்கையும் கண்டித்து மூன்று மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரியும் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மூன்று நகராட்சி, 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் போராட்டம் நடத்தப்படும்.
முதல் கட்ட போராட்டம் நாளை 20ம் தேதி காலை 10:00 மணிக்கு உழவர்கரை நகராட்சி எதிரே நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.