/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு போராட்டம்
/
மின் ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு போராட்டம்
மின் ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு போராட்டம்
மின் ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு போராட்டம்
ADDED : ஆக 19, 2024 11:29 PM

புதுச்சேரி: மின் விபத்தில் உயிரிழந்த மின்துறை ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி மின்துறை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் முருகையன், 53; முதலியார்பேட்டை மின்துறை அலுவலகத்தில் ஒயர் மேனாக வேலை செய்து வந்தார். கடந்த 14ம் தேதி மாலை முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகர் பகுதி சிமெண்ட் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கிழே விழுந்தார்.
தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகையன் உயிரிழந்தார். மின் விபத்தில் சிக்கி உயிரிழந்த முருகையன் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மின்துறையில் காலியாக உள்ள 850 பணியிடங்களால் வேலை பளு அதிகரித்து மின் விபத்துக்கள் ஏற்படுவதால் காலி பணியிடங்களை நிரப்ப கோரி மின்துறை தலைமை அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் தணிகாச்சலம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். ஆலோசகர் ராமசாமி, பொறியாளர் சங்க தணிகைவேலன், உத்திராடம், ரவிச்சந்திரன், பரத்குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். செந்தில்குமார் நன்றி கூறினார்.

