ADDED : ஜூலை 28, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
: அரியாங்குப்பம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை ராமு எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி தவளக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில், எல்.கே.ஜி., முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ராமு எம்.எல்.ஏ., சீருடைகள் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் சித்தாநந்தன் முன்னிலை வகித்தார்.
இதனை தொடர்ந்து, நல்லவாடு சாலை தானாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., இலவச சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
