/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : செப் 08, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திராநகர் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
சமூக நலத்துறை மூலம், இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த 8 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 8.5 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில், அரசு கொறடா ஆறுமுகம், சமூக நலத்துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.