/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., தினக்கூலி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பி.ஆர்.டி.சி., தினக்கூலி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.ஆர்.டி.சி., தினக்கூலி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.ஆர்.டி.சி., தினக்கூலி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 04:22 AM

புதுச்சேரி, : பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.
புதுச்சேரி, பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில், போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கடந்த, 9 ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு, ரூ.350 தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், அந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள், அரசு ஊழியர் சம்மேளன பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.