/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - நாகர்கோவில் இடையே பி.ஆர்.டி.சி., அல்ட்ரா டீலக்ஸ் பஸ் சேவை
/
புதுச்சேரி - நாகர்கோவில் இடையே பி.ஆர்.டி.சி., அல்ட்ரா டீலக்ஸ் பஸ் சேவை
புதுச்சேரி - நாகர்கோவில் இடையே பி.ஆர்.டி.சி., அல்ட்ரா டீலக்ஸ் பஸ் சேவை
புதுச்சேரி - நாகர்கோவில் இடையே பி.ஆர்.டி.சி., அல்ட்ரா டீலக்ஸ் பஸ் சேவை
ADDED : ஏப் 25, 2024 03:35 AM

புதுச்சேரி: புதுச்சேரி - நாகர்கோவில் இடையே பி.ஆர்.டி.சி., புதிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ் சேவை நேற்று துவங்கப்பட்டது.
புதுச்சேரி பொதுமக்கள் வியாபாரிகள் தென் தமிழகம் மற்றும் கன்னியாக்குமரி சுற்றுலா தளங்களுக்கு சென்றுவர பி.ஆர்.டி.சி. சார்பில் புதுச்சேரி - நாகர்கோவில் இடையே பஸ் இயக்கப்பட்டு வந்தது.
இந்த பஸ் 15 ஆண்டிற்கு மேல் பயன்பாட்டில் இருந்ததால், புதிய பஸ் வாங்கி பாடி கட்டப்பட்டது. அவ்வாறு பாடி கட்டப்பட்ட புதிய பி.ஆர்.டி.சி. அல்ட்ரா டீலக்ஸ் பஸ் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
இந்த பஸ் கடலுார், பண்ருட்டி , நெய்வேலி, விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடைகிறது.
நாகர்கோவிலில் புறப்பட்டு அதே வழியாக புதுச்சேரி வருகிறது. தினசரி மாலை 6:25 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்படுகிறது. அதுபோல் மறுபார்க்கத்தில் தினசரி மாலை 5:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புதுச்சேரிக்கு பஸ் புறப்படுகிறது. இந்த பஸ் மாலை 6:15 மணிக்கு திருநெல்வேலியும், இரவு 7:30 மணிக்கு கோவில்பட்டி, இரவு 9:45 மணிக்கு மதுரை கடந்து புதுச்சேரி வருகிறது.
புதுச்சேரியில் இருந்து நாகர்கோவிலுக்கு முன்பதிவு கட்டணத்துடன் சேர்ந்து ரூ. 640, திருநெல்வேலிக்கு ரூ. 570 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

