/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாரச்சந்தையில் முறைகேடு பொதுமக்கள் குற்றச்சாட்டு
/
வாரச்சந்தையில் முறைகேடு பொதுமக்கள் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 25, 2024 11:52 PM

பாகூர்: முள்ளோடை வாரச்சந்தையில் முறைகேடுகள் நடப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடையில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு, கடலுார், விழுப்புரம், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
கிருமாம்பாக்கம், பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
சமீப காலமாக சந்தையில் பயன்படுத்தப்படும் எடை அளவுகளில் முறைகேடுகள் நடப்பதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.
பெரும்பாலான கடைகளில் எலெக்ட்ரானிக்ஸ் தராசு, சில கடைகளில் தட்டு தராசுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தராசுகளில் எடை போடும் பொருட்களின், எடை அளவு குறைவதாகவும், வெளி கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை விட, சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
நேற்று சந்தையில் இரண்டு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெளியில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ 18 முதல் 22 ரூபாய் வரை விற்பனையானது. பொது மக்கள் காய்கறிகளை தரம் பார்த்து தேர்வு செய்யவும், வியாபாரிகள் அனுமதிப்பது கிடையாது.
வியாபாரிகள் அள்ளிப்போடும் பொருட்களை வாங்கி சென்று வீட்டில் பிரித்து பார்த்தால், அழுகிய தரமற்ற காய்கறிகள் இருப்பதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, அடிக்கடி பொது மக்கள், வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முள்ளோடை வாரச்சந்தையில் சம்மந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

