/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நள்ளிரவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
/
நள்ளிரவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 01, 2024 01:54 AM

புதுச்சேரி : தனியார் ரெஸ்ட்டோ பாரில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை கண்டித்து நள்ளிரவில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி 45 அடி சாலையில் தனியார் ரெஸ்ட்ரோ பார் உள்ளது. இந்த பாரில் உள்ள கழிவறை தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ராஜராஜேஸ்வரி நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக நகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ரெஸ்ட்டோ பார் உரிமை யாளரிடம் புகார் தெரிவித்தால் அவ்வப்பபோது நடவடிக்கை எடுப்பதோடு சரி.
இந்நிலையில் நேற்று இரவு 11:00 மணியளவில் பாரில் உள்ள செப்டிங்க் டேங் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் தேங்கி நின்றது. அதோடு மட்டுமல்லாமல் பாரில் குடிப்பவர்கள் பாட்டில்களை சாலைகளில் வீசினர்.
இதனை கண்டித்து தெருவில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் திடிரென ஒன்று திரண்டு ரெஸ்டோ பாரை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து பார் உரிமையாளர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகர் பொதுமக்கள் கூறுகையில், 'இந்த ரெஸ்டோ பார் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீரால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. ஒவ்வொறு முறையும் புகார் தெரிவிக்கும் போது மட்டும் நகராட்சி நடவடிக்கை எடுக்கிறது. அதன் பிறகு விட்டுவிடுகின்றனர்.
இப்பகுதியில் கழிவு நீர் வெளியேற்றபடுவதை நிறுத்த நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையெனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என்றனர்.