/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசை தாக்கிய விவகாரம் பொதுமக்களிடம் விசாரணை
/
போலீசை தாக்கிய விவகாரம் பொதுமக்களிடம் விசாரணை
ADDED : ஆக 12, 2024 05:09 AM
புதுச்சேரி: போலீசாரை தாக்கியது தொடர்பாக, பொதுமக்களிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
வில்லியனுார் அருகே குற்றவாளியை பிடிக்க சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வசந்த் சரமாரியாக தாக்கப்பட்டார். காயமடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில், சேர்த்தனர்.
போலீசாரை மருத்துவமனையில் சேர்த்த அப்பகுதியை சேர்ந்த சில குடும்பத்தினருக்கு, குற்றவாளிகள் மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, நேற்று போலீசார் தாக்கப்பட்ட இடத்தில் குடியிருக்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும், மிரட்டல் ஏதாவது வந்தால், போலீசார் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் என, அப்பகுதியினரிடம் போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்து விட்டு சென்றனர்.