/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் ரூ.12,811 கோடி இழப்பு; இந்திய ஒருங்கிணைப்பு கமிட்டி தகவல்
/
சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் ரூ.12,811 கோடி இழப்பு; இந்திய ஒருங்கிணைப்பு கமிட்டி தகவல்
சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் ரூ.12,811 கோடி இழப்பு; இந்திய ஒருங்கிணைப்பு கமிட்டி தகவல்
சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் ரூ.12,811 கோடி இழப்பு; இந்திய ஒருங்கிணைப்பு கமிட்டி தகவல்
ADDED : மார் 07, 2025 04:55 AM

புதுச்சேரி : சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் 12,811 கோடி ரூபாயை பொதுமக்கள் இழந்துள்ளதாக இந்தியன் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி போலீஸ் அதிகாரிகளுக்கு, சைபர் குற்றங்கள் தடுப்பது தொடர்பாக இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில், புதுச்சேரி போலீஸ் அதிகாரிகளுக்கான இரண்டு நாள் சைபர் புலனாய்வு குறித்த பயிற்சி நேற்று துவக்க நிகழ்ச்சி நடந்தது.
சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் தலைமை தாங்கினார். சட்டம், ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி ஐ.ஜி., அஜித் குமார் சிங்ளா, பயிற்சியை துவக்கி வைத்தார். இதில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு கமிட்டி வல்லுநர்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.
அவர்கள் பேசுகையில், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 31 முதல் டிசம்பர் வரை இந்தியா முழுவதிலும் 9 லட்சத்து 32 ஆயிரத்து 103 புகார்கள் பதிவாகியுள்ளது.
இதில் 12 ஆயிரத்து 811 கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். 2 ஆயிரத்து 114 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. 1,574 கோடி ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கிலேயே முடக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு சீன நாட்டவர்கள் தலைமை தாங்குவதாகவும், பனாமா, மியான்மர், பாகிஸ்தான், துபாய் போன்ற நாடுகள் இதற்கு மிகப்பெரிய கேந்திரங்களாக செயல்படுவதாகவும், இந்தியாவில் பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் பணங்கள் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொாண்டு வருகிறது என்றனர்.
இதில், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.