பொதுப்பணித்துறை ஊழியர்கள் 2 வது நாளாக தர்ணா போராட்டம்
பொதுப்பணித்துறை ஊழியர்கள் 2 வது நாளாக தர்ணா போராட்டம்
ADDED : ஜூன் 30, 2026 08:12 PM
புதுச்சேரி: பொதுப்பணித்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை ஓவர்சீர், ஒர்க் இன்ஸ்பெக்டர், மெக்கானிக், எம்.டி.எஸ். ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் 2வது நாளாக நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். அரசு ஊழியர்சங்க கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாசலம், தொழில்நுட்ப ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் தனராசு வாழ்த்தி பேசினர். நிர்வாகிகள் குமார், அண்ணாமலை, ஜெய்சங்கர், பச்சையப்பன், வெங்கடேசபெருமாள், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், ஜூனியர்களின் சம்பளத்திற்கு இணையாக விடுபட்ட சீனியர் எம்.டி.எஸ் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். சீனியர் மெக்கானிக், மெக்கானிக் பதவிகளை இணைத்து போர்மேனாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓவர்சீர் நியமன விதிகளை திருத்த வேண்டும். எம்.டி.எஸ்.,களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக, தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள், பின் செஞ்சி சாலை வழியாக ஊர்வலமாக சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்தின் பின்புறம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
