இந்திரா காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் ராஜாராம் பணி நிறைவு
இந்திரா காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் ராஜாராம் பணி நிறைவு
UPDATED : ஜூன் 30, 2026 10:12 PM
ADDED : ஜூன் 30, 2026 09:43 PM

புதுச்சேரி: இந்திரா காந்தி அரசு மருத்துவமனை முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜாராமனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் ராஜாராமனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. விழாவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷவர்த்தன் சர்மா, குறைதீர் அதிகாரி ரவி, மற்றும் டாக்டர்கள் , ராஜாராமன் சேவைகள் குறித்து பாராட்டி பேசினர்.
அதைத்தொடர்ந்து ராஜா ராமன், அவரது மனைவி உமா ஆகியோரை டாக்டர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். அதன் பின், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன் கூறுகையில், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் 35 ஆண்டுகளாக டாக்டர் ராஜாராமன் சிறப்பாக பணியாற்றிவுள்ளார். முதலில் மருத்துவ அதிகாரி, அடுத்து அறுவைச் சிகிச்சை நிபுணர் அதன் பின்னர் 2002 ஆண்டு முதல் மருத்துவ மனையின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி ஏராளமான நரம்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார் என்று கூறினார். நிகழ்ச்சியில் செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு ராஜாராமனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
