மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி, நவீன தொழில்நுட்ப அறிவை தட்சசீலா பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது: வேந்தர் தனசேகரன்
மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி, நவீன தொழில்நுட்ப அறிவை தட்சசீலா பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது: வேந்தர் தனசேகரன்
ADDED : ஜூன் 30, 2026 11:38 PM

புதுச்சேரி: தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் தனசேகரன் கூறியதாவது:
தட்சசீலா பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி, நவீன தொழில்நுட்ப அறிவை வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டு துவங்கப்பட்ட பல்கலைக்கழகம், மாணவர்களின் அறிவுத் திறன், படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் கல்வி வழங்குகிறது.
பல்கலைக்கழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், வேளாண்மை, மேலாண்மை, மருத்துவம், கணினி அறிவியல், செவிலியர் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள், ஆராய்ச் சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அனுபவமிக்க பேராசிரியர்கள் மற்றும் நவீன கற்பித்தல் முறைகள் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகள்
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வளாக நேர்காணல் மூலமாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பாடத்திட்டம் அளிக்கப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்று, பல பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளனர். தரமான கல்வியின் மூலம் மாணவர்களின் போட்டி திறனை வளர்த்து, வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.
சிறப்பு பயிற்சிகள்
பல்கலைக்கழகம், மாணவர்களின் திட்டங்களை உருவாக்கும் திறனை மேம்படுத்த செய்முறை கண்காட்சியையும், மற்ற கல்லுாரியைச் சார்ந்த மாணவர்களுக்கு ஹேக்கத்தான் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களின் இணை மற்றும் கூடுதல் கல்வி அறிவை மேம்படுத்த மாணவர்கள் கிளப் துறை வாரியாக செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களின் இறுதியாண்டில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி பல திட்டங்கள் உருவாக்குவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு சிறந்த திட்டங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. விளையாட்டுத் திறனை மேம்படுத்த கேலோ போட்டியினை பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பல பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தின் சிறப்புமிக்க பண்பாட்டு விழாவான 'தக்ஷக்' விழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது என்றார்.
