/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை மண்டல மேலாண்மை தரவு அறிக்கை வெளியீடு
/
கடற்கரை மண்டல மேலாண்மை தரவு அறிக்கை வெளியீடு
ADDED : ஆக 12, 2024 05:06 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரை மண்டல மேலாண்மை வரைவு திட்டத்தில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த அறிக்கை வெளியீட்டு விழாவில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கான கடற்கரை மண்டல மேலாண்மை வரைவு திட்டத்தை, அரசு உருவாக்கி வருகிறது. அதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் தரவு அறிக்கையை உருவாக்கி உள்ளது.
இதன் வெளியீட்டு விழா, இ.சி.ஆர் விளிம்ப நிலை மக்களின் வாழ்வாதார மையத்தில் நடந்தது. இதில், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் முதன்மை செயலாளர் சக்திவேல் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கினார். வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்தார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, நேரு எம்.எல்.ஏ., மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம், இ.கம்யூ., அந்தோணி ஆகியோர் பங்கேற்று அறிக்கையை வெளியிட்டனர். கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் பாலு, தரவு அறிக்கை குறித்து விளக்கினார்.
ஏற்பாடுகளை தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மற்றும் கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செய்திருந்தது. கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் அருண்குமார் நன்றி கூறினார்.

