தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.ஆர்க்., வரைவு ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

பி.ஆர்க்., வரைவு ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

பி.ஆர்க்., வரைவு ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு


ADDED : ஆக 18, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி  மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் 2026–2027-ம் கல்வியாண்டின் பி.ஆர்க் இரண்டாம் கட்ட வரைவு சேர்க்கை ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்டாக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பி.ஆர்க்., படிப்பிற்கான இரண்டாம் கட்ட வரைவு ஒதுக்கீடு பட்டியல் நேற்று சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் Dashboard லாகின் விவரங்களைப் பயன்படுத்தி ஒதுக்கீடு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், லாகின் டேஷ்போர்டில் உள்ள Grievance வசதி மூலம் இன்று 19ம் தேதி காலை 11:00 மணி வரை புகார்களை பதிவு செய்யலாம்.

மாணவர்களின் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, பி.ஆர்க்., இரண்டாம் கட்ட தற்காலிக சேர்க்கை பட்டியல்  வெளியிடப்படும். தற்காலிக பட்டியல் வெளியான பிறகு, ஒதுக்கீட்டு ஆணை , அசல் சான்றிதழ்கள் மற்றும் உரிய கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வரிடம் வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் நேரில் சென்று சேர வேண்டும். இந்த வரைவு பட்டியல் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே ஆகும். இதில் இடம்பெறும் ஒதுக்கீட்டை இறுதியானதாகக் கருதி உரிமை கோரவோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ முடியாது. தற்காலிக சேர்க்கை பட்டியல் வெளியாகி, ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்த பின்னரே மாணவர்கள் கல்லுாரிக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தையோ அல்லது 0413-2655570, 2655571 உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us