இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி சைபர் கும்பல் கைவரிசை
இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி சைபர் கும்பல் கைவரிசை
ADDED : ஆக 18, 2026 09:52 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் 2 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.8 லட்சம் இழந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த ரமணன், 38; என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தபடி பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பிய, அவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 5 லட்சத்து 66 ஆயிரத்து 128 முதலீடு செய்தார். பின், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்து வந்துள்ளார். அதன் மூலம் அவருக்கு வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன்பிறகு அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல், லாஸ்பேட்டை, ஸ்ரீ கைலாஷ் நகரைச் சேர்ந்த கார்த்திக், 26; என்பவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 இழந்துள்ளார்.
இது குறித்து இருவரும் லாஸ்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
